top of page
Writer's pictureBCF- INDIA

'டேங்க் கிளீனர்' மீன்களுக்கு தடை அவசியம்!

Source: Dinamalar


வன உயிரின மற்றும் மீன் ஆராய்ச்சியாளர் டாக்டர் குமரகுரு: சில ஆண்டுகளுக்கு முன் எங்காவது ஓரிரு ஏரி, கண்மாய்களில் மட்டுட்மே, 'டேங்க் கிளீனர்' எனப்படும், 'பி.ௌக்கோ' மீன்கள் காணப்படும்; இப்போது, மதுரை உள்ளிட்டட் பல மாவட்ட ஏரிகள், கண்மாய்களில், இவை அதிகரிக்கத் துவங்கியுள்ளன


ஏற்கனவே, நாட்டுட் மீன் வளத்தை கபளீகரம் செய்து வந்த, ஆப்ரிக்க கெளுத்தி என்ற மீன் வகை யை, மத்திய அரசு, 2013ல் தடை செய்தது. மழை, வெள்ள காலங்களில் குளம் குட்டைகளில் இருந்து தப்பி, மற்ற நீர்நிலைகளில் புகுந்து விடும், இந்த கெளுத்தி மீன்கள், பசி எடுத்தால் தயவு தாட்சண்யம் பார்க்க்காமல், மற்ற மீன்களை அப்படியே விழுங்கி விடும். 'இந்த கெளுத்தியை சாப்பிட்டால், இதயநோய் பாதிப்பு வரும்' என்று மருத்துவ வட்டாரங்களும் எச்சரித்துள்ளன. இந்த ஆப்ரிக்க கெளுத்தியைப் போலவே, பி.ௌக்கோ என்ற, டேங்க் கிளீனர் மீன்களும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளன


மீன்களின் கழிவுகளை அகற்ற, மிகச் சிறிய அளவு டேங்க் கிளீனர் மீன்களை தொட்டிக்குள் விடுகின்றனர்; அவை சில மாதங்களிலேயே, ராட்சத அளவில் வளர்ந் தொட்டியை ஆக்கிரமிக்கின்றன. அதனால், இந்த மீன்களை எடுத்து, அருகில் உள்ள குளம், குட்டை அல்லது ஆறு வாய்க்கால்களில் விடுகின்றனர

அது, அப்படியே மழை, வெள்ள காலங்களில் பெருமளவில் பரவி, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்திலும், "டாமினேட்" செய்யத் துவங்கி விட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டட் த்திலும், ஒவ்வொரு நீர்நிலையிலும், ஒவ்வொரு வகையான நாட்டுமீன்கள் பிரபலம். குறிப்பாக, மதுரை மாவட்டம் வைகை அணையின், அயிரை மீன் வகையை சொல்லலாம். டேங்க் கிளீனர் மீன்களின் ஆக்கிரமிப்பால், இன்னும் சில ஆண்டுகளில், அயிரை மீன் வகை யே காணாமல் போய் விடலாம். அதேபோல, அணைக்கரை மற்றும் வீராணம் ஏரியில், விரால், குரவை மீன்களின் சுவை, மற்ற எந்த மீன்களுக்கும் வராது. தற்போது, டேங்க் கிளீனர் மீன்களின் ஆக்கிரமிப்பால், அந்த மீன்களின் உற்பத்தியும் குறைந்து இருக்கிறது. நாட்டு மீன்கள் நிரம்பிய ஆறு, ஏரிகளில் உள்ள நீரில், மீன் கழிவுகளால் உருவாகும், 'நைட்ரிக்' அமிலங்களால், இயற்கையான, 'யூரியா' அதிகமாகி, அந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் போது, விவசாய நிலங்களுக்கு ஏற்றதாக இருக்கும்; பயிர் செழித்துத் வளரும். தற்போது, அதுவும் பாதிக்கப்படுகிறது. எனவே, டேங்க் கிளீனர் மீன்களுக்கு, அரசு தடை விதிக்க வேண்டும். இந்த மீன்களை, நீர்நிலைகளில் கொண்டு வந்து விடுவோர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Comments


bottom of page